99.The Earthquake

  1. (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது
  2. அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்
  3. மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்
  4. அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்
  5. (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்
  6. அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்
  7. ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்
  8. (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்