அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர்
மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா
அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்
நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும்
(நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீர் அறிவீரா
அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
அவர்கள் (இதை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர்
வரம்புமீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்யாக்க மாட்டான்
அவனுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் தான் என்று கூறுகிறான்
நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்)
அவ்வாறல்ல. (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்
பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள்
பின்னர், (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்
அவ்வாறல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு ‘‘இல்லிய்யூன்' என்ற (மேலான) இடத்தில் இருக்கும்
(நபியே!) ‘இல்லிய்யூன்' என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீர் அறிவீரா
அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும்