103.The Declining Day, Epoch

  1. காலத்தின் மீது சத்தியமாக
  2. (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்
  3. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை)